ETV Bharat / state

Viral Video - 'இஞ்சி இடுப்பழகி' பாடல் பாடிய திமுக கவுன்சிலர்கள் - இஞ்சி இடுப்பழகி பாடல் பாடிய கவுன்சிலர்கள்

கோயம்புத்தூரில் நடந்த ‘இன்னிசை ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Etv Bharat ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் பாடிய திமுக கவுன்சிலர்கள்

author img

By

Published : Sep 12, 2022, 6:31 PM IST

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உள்ள வாலாங்குளத்தில் ‘இன்னிசை ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

நேற்று முன் தினம் (செப்.10) மற்றும் நேற்று (செப்.11) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொருள்காட்சிகள் உள்பட பல்வேறு விளையாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் அங்கு பார்வையிட சென்ற மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் "இஞ்சி இடுப்பழகி" பாடலை பாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். முபிசிரா, மீனா லோகு, சாந்தி முருகன், வித்யா ராமநாதன், ஷர்மிளா சுரேஷ், முனியம்மாள் ஆகியோர் இப்பாடலை கூட்டாக சேர்ந்து பாடினர்.

'இஞ்சி இடுப்பழகி' பாடல் பாடிய திமுக கவுன்சிலர்கள்

தற்போது அவர்கள் பாடிய அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாநகராட்சி கவுன்சிலர்கள் மக்களை உற்சாகப்படுத்த இது போன்று பாடல் பாடியது பலரிடையேயும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் மலர்த்தூவி நடந்த கோயில் கும்பாபிஷேகம்: வியந்துபார்த்த பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.