கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள உதவும் உள்ளங்கள் என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு, சமத்துவ பொங்கல் திருவிழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திமுக இளைஞர் அணி சார்பில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் ஆதரவற்ற முதியோர்களுடன் திமுக நிர்வாகிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதில் முதியோர் பொங்கலிட்டு பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்ததுடன் பாடல்கள் பாடினர். பின்னர் முதியோருக்கு பொங்கல், காலை உணவு பரிமாறப்பட்டது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட பிரதிநிதி பொள்ளாச்சி அமுதபாரதி, தர்மராஜ், PA செந்தில், kv ஆறுமுகம், திருமலைராஜா, லிங்கதுரை, தங்கவேல், ராஜீவ் காந்தி, ஈஸ்வரன், சதீஸ், தனம் தங்கதுரை, விக்னேஷ், நாகராஜ், சரவணன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கனிமொழி