கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் 84 ஊராட்சி தலைவர்கள், 618 வார்டு கவுன்சிலர்கள், ஆறு மாவட்ட கவுன்சிலர்கள், 43 ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சித் தேர்தலில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு யுவராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களுக்கான அடிப்படை பிரச்னைகளான குடிநீர் பிரச்னைகள், மின்விளக்குகள், சுகாதாரமின்மை போன்ற பிரச்னைகள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும். எனவே, நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுடைய பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாகச் செயல்படுவோம்" என்றார்.
இதையும் படிங்க: பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்: குவியும் பாராட்டுகள்!