கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தீபாவளி பண்டிகையையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 வருடங்களாக தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே, இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மாசு இல்லா சுற்றுச்சூழலை பேணி காப்பது நமது கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அப்பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கவும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தீபாவளி விடுமுறை... ரூ.600 கோடி மது விற்பனைக்கு இலக்கு...