ETV Bharat / state

சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியர் உறுதி - கடுமையான தண்டனை

கோவை: சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ராஜாமணி
author img

By

Published : Mar 27, 2019, 2:27 PM IST

இதுகுறித்துமாவட்ட ஆட்சியர் கூறுகையில்,சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்துவரை குழந்தைகள் நலனுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புகள் மற்றும் இயக்கங்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர்

இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்களுடைய மகளுக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் இப்படியொருகொடுமை ஏற்படக்கூடாது.இதுவே முதலும்கடைசியுமாக இருக்க வேண்டும்.அதற்கு ஏற்றார்போல் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை தங்களுடைய மகளின் உடலை வாங்கப் போவதில்லை எனத்தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும் எனவும்தெரிவித்தனர்.

Intro:சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

Body:சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாகவும் போலீஸ் விசாரணை நல்ல முறையில் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்தார் மேலும் கோவையில் குழந்தைகள் நலனுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புகள் இயக்கங்கள் ஒன்றிணைந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற் கொள்கிறோம் என்றும் போராட்ட செய்கின்ற மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இது குறித்து காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது எனவும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் அதற்கு ஏற்றார்போல் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை தங்களுடைய குழந்தையின் உடலை பெறப் போவதில்லை என தெரிவித்து அவர்கள் தங்களுக்கு 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அந்த இளைஞர்களை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா இந்த சம்பவத்தில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கோவையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனை அளிக்கும் அளிப்பதாகவும் தமிழக முதல்வர் இது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள மகிலா நீதிமன்ற நீதிபதி பணியிடத்தை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார் பெற்றோருக்கு ஆதரவாக மாதர் சங்கம் தொடர்ச்சியாக இருந்து போராடும் எனக் கூறியவர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.