கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் தடாகம் சாலையில் ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனமும், பொறியியல் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகின்றார். தனது வீட்டில் இரண்டாவது தளத்தில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புடைய வைர, தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக சாய்பாபா காலனி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொள்ளைபோன வீட்டிற்கு இரண்டு வீடுகள் அடுத்து ஆதித்யா குப்தா என்பவரது வீட்டிலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நூதன முறையில் செல்ஃபோன்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் - திருடனுக்கு வலைவீச்சு!