கோவை பவர்ஹவுஸ் டாடாபாத்தில் அனைத்திந்திய வங்கி ஒய்வூதியர்கள், பணிமூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தில் 30 சதவீதம் உயர்த்திட வேண்டும், மருத்துவ இன்சூரன்ஸின் பிரிமியம் குறைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அனைத்து வங்கி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி சாலை மறியல்!