கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இன்று (மே.10) முதல் 24ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதை பின்பற்றும் விதமாக கோவை காந்திபுரம், டவுன்ஹால், ரயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் மளிகை கடைகள் மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், இறைச்சி கடைகள் தவிர்த்து பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே இயங்குகின்றன. இதனால் ஊரடங்குபோல இல்லை என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வந்தா என்ன? பதற வேண்டாம் - கூப்பிடுங்க '104'