ETV Bharat / state

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்கை! - coronavirus

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி கனிமவள பாதுகாப்பு குழுவினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்கை

author img

By

Published : Dec 29, 2020, 4:07 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் பகுதிகளில் செங்கல் சூலைகள் இருக்கின்றன. இங்கு அரசு கொடுத்த அளவை மீறி செம்மண் எடுக்கப்படுகிறது. இதனால் கனிம வள கொள்ளை அதிகரித்துவருவதால், இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே இது குறித்து புகார்கள் எழுந்தன. அப்புகாரின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாசு கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் துறையினர், வடக்கு வட்டாட்சி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டதனைத் தொடர்ந்து செம்மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக செங்கல் தயாரிப்பு பணிகளும் முடங்கின. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில் தடாகம் பகுதிகளில் மீண்டும் செம்மண் எடுக்கும் பணி முழு வீச்சில் தொடங்கிவிட்டது.

இதனால், கனிமவள பாதுகாப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், “சட்டத்திற்கு புறம்பாக கனிம வள கொள்ளை நடப்பதால், அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, ஜனவரி ஐந்தாம் தேதி அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது. எனவே, அதற்கு அரசு அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.