ETV Bharat / state

திருநங்கையாக மாறியது பாவமா? -கதறி அழும் திருநங்கை! - death threats converting women

கோவை: ஆணாக இருந்து பெண்ணாக மாறிய சீமாட்சி என்பவரை அவரது பெற்றோர்கள் அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

seematchi
author img

By

Published : Sep 26, 2019, 5:42 PM IST

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சீமாட்சி( திருநங்கை). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். சிங்கப்பூரில் இருந்தபோது தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணுறுப்பாக மாற்றிகொண்டார். அவர் அங்கு பணியாற்றும்பொழுது மாதந்தோறும் 65 ஆயிரம் ரூபாய் தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார். விடுமுறைக்காக சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த சீமாட்சிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

ஆணாக சென்று பெண்ணாக திரும்பியதால் அவரது குடும்பத்தினர் சீமாட்சியை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் மன வேதனையடைந்த திருநங்கை சீமாட்சி அவரது வீட்டிற்கு சென்று சொத்தில் பங்கு கேட்டுள்ளார். சொத்தில் பங்கு தர மறுத்த அவரது குடும்பத்தினர் கடும் சொற்களால் சீமாட்சியை திட்டியதாகத் தெரிகிறது. இதனையடுத்து சீமாட்சி தனது குடும்பத்தினர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

ஆட்சியரிடம் புகார் அளித்த சீமாட்சி

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சீமாட்சியின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சீமாட்சியின் பெற்றோர் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. சீமாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் கோபமடைந்த அவரது பெற்றோர்கள் சீமாட்சியை சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். திருநங்கையாக மாறியதால் தன்னை பெற்றோர் ஏற்காததால், தான் சம்பாதித்த பணத்தை பெற்றோர்களிடம் இருந்து பெற்று தரும்படி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

Intro:ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு பெற்றோரிடமிருந்து கொலை மிரட்டல்Body:ஆணாக இருந்து பெண்ணாக மாறியவருக்கு பெற்றோர்களால் கொலை மிரட்டல்

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சீமாட்சி( திருநங்கை). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர் தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெணுறுப்பாக மாற்றிகொண்டார். அவர் மாதம் 65 ஆயிரம் சம்பாதித்து அவரது குடும்பத்தினருக்கு அளித்துள்ளார். தற்போது அங்கிருந்து கோவைகே வந்துவிட்டார். கோவையில் விளாங்குறிச்சியில் வீடு எடுத்து வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அவரது வீட்டிற்கு சென்று தன் சொத்தில் பாதி கேட்ட போது அவர் குடும்பத்தினர் நீ எல்லாம் எங்கள் மகனே இல்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். மேலும் அவர் வீட்டிற்கே வந்து மிரட்டி அடித்துள்ளனர். அதனால் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினரும் அவர் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர். அதனால் மேலும் கோபமடைந்து மீண்டும் வீட்டிற்கு வந்து அடித்து உதைத்து வெளியேற்றி வீட்டையும் பூட்டி விட்டு இனி மேலும் நீ இங்கிருந்தால் விஷம் வைத்து கொன்று விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் சீமாட்சி தற்போது அருகில் இருப்போர் வீட்டில் இருக்கிறார்.

எனவே சீமாட்சி தனக்கு பாதுகாப்பு வழங்கும் படியும், தான் சம்பாதித்த பணத்தை அவர் பெற்றோர்களிடம் இருந்து பெற்று தரும் படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்க வந்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.