பெட்ரோல், டீசல் விலையை போன்று, அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசானது ஒரே மாதத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோவையுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தியதோடு, விறகு அடுப்பு வைத்து கஞ்சி சமைத்தனர். மேலும், சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் சமையல் எரிவாயு விலை - பொதுமக்கள் அவதி