பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச்சங்கம் எம்விஎஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவிநாசி சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச்சங்கத்தின் தலைவர் அர்ஜுன் பாலு, ' தங்களுடைய அமைப்பின் சார்பில் கோவையில் தேசிய அளவிலான பிரீமியர் சைக்கிள் பந்தயத்தை நடத்தவுள்ளோம். இந்தப் போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி செட்டிபாளையம் பேர்வே டிராக்கிலும் பிப்ரவரி 2ஆம் தேதி கரி மோட்டார் ஸ்பீட் வேயிலும் நடைபெற உள்ளன' எனத் தெரிவித்தார்.
இந்தப் பந்தயத்தில் நான்கு வயது குழந்தைகள் முதல் 40 வயதுடைய ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்தப் பந்தயத்தில் வெற்றிபெறுவோருக்கு மொத்தமாக இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சைக்கிள் வீரர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள வருகை தருகின்றனர். சைக்கிள் வீரர்களுக்கு ஒரு மணிநேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டக் கூடிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குழந்தைகள், பெரியவர்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்!