ETV Bharat / state

தொடர் வன்முறை : ஒரே இரவில் 127 பேரைக் கைது செய்துள்ள கோவை காவல்துறை!

கோவை : ஒரு வார காலமாக நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 12, 2020, 5:58 PM IST

Crimes of violence: Coimbatore police arrests 127 people overnight!
தொடர் வன்முறை : ஒரே இரவில் 127 பேரை கைது செய்துள்ள கோவை காவல்துறை!

கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் இதனைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண், 'கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு குழுக்களுக்கிடையே தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்து, இஸ்லாமியர்கள் இடையே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியர் ஒருவரின் காரை சேதப்படுத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதியின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் விசாரணைகளுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் என்பவரைத் தாக்கிய வழக்கிலும், தாகிர் இக்பால் என்பவரைத் தாக்கிய வழக்கிலும் சிலர் மீது சந்தேகம் உள்ளது. அவர்களை விசாரணைக்குட்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நேற்று இரவு 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோவை மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண் பேட்டி

கோவையில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட இந்து - இஸ்லாமிய அமைப்புகள் ஒரு வார காலத்திற்கு எவ்வித போராட்டங்களிலோ, ஆர்ப்பாட்டங்களிலோ ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனி வரும் நாட்களில் காலை, இரவு என இரு நேரமும் காவல் துறையினர் சோதனை சுற்றிலேயே இருப்பர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அண்ணா பல்கலையை மத்திய அரசுக்கு தாரை வார்க்கப்போவதில்லை - அன்பழகன் திட்ட வட்டம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.