ETV Bharat / state

சிறுமி வன்கொடுமை வழக்கில் காவல்துறை குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது: பாலகிருஷ்ணன் - child rape case

கோவை: பன்னிமடை சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை மட்டும் கைது செய்துவிட்டு, மற்றவர்களை காவல்துறையினர் காப்பாற்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

CPIM BALAKRISHNAN
author img

By

Published : Apr 3, 2019, 10:01 PM IST

கோவை பன்னிமடை அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூர் பகுதியில் கடந்த மாதம் 25ஆம் தேதி 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த சிறுமியின் வீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

கோவையில் கடந்த ஆறு மாதமாக குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனை மாவட்ட நிர்வாக அரசு அலுவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பயன்படுத்தப்படும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினரின் அலட்சியமே காரணம். மேலும், காவல்துறை இவர்களுக்கு கைப்பாவையாகவும் மாறியுள்ளது.

சிறுமியின் வழக்கில் கைதான நபருடைய பாட்டியும் சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்துள்ளார். எனவே அந்த மூதாட்டியின் உடலில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை மட்டும் கைது செய்து மற்றவர்களைக் காப்பாற்ற காவல் துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யவேண்டும். மேலும், இவர்கள் மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது வழக்கை திசை திருப்பும் செயலாகும்.

பலியான சிறுமியின் குடும்பத்துக்கு தமிழ்நாட்டு அரசு இழப்பீடாக 1 கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Intro:கோவை பன்னிமடை பகுதியில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது மற்றவர்களை காப்பாற்றும் செயல் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Body:கோவை பன்னிமடை அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூர் பகுதியில் கடந்த 25ஆம் தேதி 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறுமி கொடூரமாக கொண்டிருப்பது தமிழகத்தையே உலுக்கி உள்ளது எனவும் கோவையில் கடந்த 6 மாதமாக குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது எனவும் மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதும் தெரிவித்தார் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது எனவும் காவல்துறை இவர்களுக்கு கைப்பாவையாக மாறி உள்ளது எனவும் தெரிவித்தார் காவல் துறையின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடைபெறுகிறது எனவும் சிறுமியின் வழக்கில் கைது நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்துள்ளார் எனவே பாட்டியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர் இந்த சம்பவத்தில் ஒருவரை மட்டுமே கைது செய்து மற்றவர்களை காப்பாற்ற காவல்துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது எனவும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் பன்னிமடை பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார் மேலும் தமிழக அரசு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிதி அளிக்க வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் சிறுமியின் சகோதரியின் கல்விக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் வேண்டுமென்றே ,திசை திருப்பும் வகையில் சிறுமியின் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளதாக பரப்புவதாகவும் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.