வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர். இதற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இதனிடையே இச்சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் போகி பண்டிகையான இன்று (ஜன. 13) வேளாண் திருத்தச் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்.
அதன்பேரில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் தலைமையில், அக்கட்சியினர் வேளாண் திருத்தச் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினர் சுப்பராயன் அப்போது வலியுறுத்தினார்.
இதையும் படிங்க...மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி