தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கோவை மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் (ஆகஸ்ட் 7) நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று (ஆகஸ்ட் 8) 189 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று மட்டும் 149 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 695ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனாவால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தரக்குறைவாக பேசிய சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!