கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கோவையில் இன்று (ஆகஸ்ட் 25) 322 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 467ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் எட்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில், 329 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 83ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மே மாத இறுதியில், 146 பேருக்கு மட்டும் கரோனா பாதிப்பு இருந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை 12ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் சென்னையைப் போல் வேகமாகப் பரவி வருகிறது. தினம்தோறும் சராசரியாக 300 முதல் 400 வரை, புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.