கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் இன்று (அக்.22) 285 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 982ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 290 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 701ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 753 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.