ETV Bharat / state

சேலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை; 43 வயது பெண் படுகொலை! இருவர் கைது? - WOMAN MURDER IN SALEM

சேலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணை கொலை செய்த விவகாரம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 3:21 PM IST

சேலம்: குடிபோதையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ரவுடி மற்றும் அவரின் கூட்டாளி என இருவரை காவல்துறையினர் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 43 வயது பெண்மணி நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலம் இனாம் பைரோஜி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்தில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின், அவர் தனது கணவரைத் தொடர்பு கொண்டு சேலம் வந்து விட்டதாகவும், ஆட்டோவில் மருத்துவமனை செல்வதாகவும் கூறியுள்ளார்.

ஸ்விட்ச் ஆப் ஆன போன்:

சிறிது நேரத்திற்கு பின் கணவன் தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினர் சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர், “நீங்கள் கூறும் நபர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை என்பதால், இது தொடர்பாக நவம்பர் 27ஆம் தேதி சேலம் மாநகர துணைக் காவல் ஆணையர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளனர்.

போனைப் பின்தொடர்ந்த காவல்துறை:

புகாரின் பேரில், நவம்பர் 28ஆம் தேதி பெண் காணாமல் போனது தொடர்பாக, சேலம் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையில், பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக அவர் தொலைப்பேசியில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்ற தகவல்களை காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி பேராசிரியை தற்கொலை: நான்கு வயது மகனின் உருக்கமான ஆடியோ!

அதில், அவரிடம் கடைசியாக பேசியது கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் பெயர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கனகராஜை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சிக்கிய பூண்டு வியாபாரி:

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கனகராஜ் பூண்டு வியாபாரம் செய்வதற்காக பெண்ணின் ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் கடந்த பத்து நாட்களாக தொலைப்பேசியில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தான், நவம்பர் 25-ஆம் தேதி, கோரிமேடு பகுதிக்கு காலை 10 மணிக்கு கனகராஜைப் பார்க்க பெண் வந்துள்ளார்.

இதையும் படிங்க: பாடல் கேட்கத் தடையாக இருந்த இளைஞர் படுகொலை.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இந்த சமயத்தில், கனகராஜ் தன்னுடைய ரவுடி கூட்டாளியான கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை அழைத்து ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடி அருகில் மறைவான இடத்தில் நிற்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெண்ணுடன் காட்டுப்பகுதிக்குள் கனகராஜ் சென்றுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை:

அப்போது குடிபோதையில் இருந்த கனகராஜ் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த சக்திவேல் வலுக்கட்டாயமாக பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட முயன்றுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், பெண்ணுக்கும் கனகராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கனகராஜ் அவர் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்து சாய்ந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த சக்திவேலும், கனகராஜூம் வலுக்கட்டாயமாக மாறி மாறி அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின், இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரின் உடலை முட்புதரில் நிர்வாண நிலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்,” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கு: சாயல்குடி தம்பதியிடம் நடந்த விசாரணை.. கொலையில் நீளும் மர்மம்!

இதையடுத்து, நவம்பர் 30-ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கனகராஜையும், அவரது நண்பர் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சேலத்தில் 43 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் காட்டுத்தீ போல எல்லா இடத்திலும் பரவியது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.