கரோனா தடுப்பு நடவடிக்கையோடு அரசு அலுவலங்கள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் கிருமி நாசினி தெளித்து இயங்கி வருகிறது. ஆனால் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் ஒரு படி மேலே சென்று மக்களுக்கு பாதிப்பு அண்டாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கையை செய்து இயங்கிவருகிறது.
அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு வாயிலிலேயே தானியங்கி கிருமி நாசினி வழங்கும் கருவி மூலம் கை கால்களுக்கு கிருமி நாசினி வழங்கி சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் அனைவருக்கும் கபசுரக் குடிநீர், இஞ்சி டீ வழங்கப்படுகின்றது. மேலும் அவர்கள் அமர பந்தல் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முகக் கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களும் வழங்கப்படுகின்றன.
![பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கும் அரசு அலுவலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-periyanayakkan-palayam-office-visu-tn10027_30052020123037_3005f_1590822037_147.jpg)
அதன்பின் பத்திரபதிவு செய்ய அலுவலகத்தில் நுழையும் அனைவரையும் காய்ச்சல் உள்ளதா என்று வெப்பமானி கொண்டு கண்டறியப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த அலுவலகத்தை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
![பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கும் அரசு அலுவலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-periyanayakkan-palayam-office-visu-tn10027_30052020123037_3005f_1590822037_444.jpg)
![பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கும் அரசு அலுவலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-periyanayakkan-palayam-office-visu-tn10027_30052020123037_3005f_1590822037_1092.jpg)
அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு இந்த பத்திர பதிவு அலுவலகம் இயங்கிவருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மக்கள் அச்சமின்றி வரலாம் என்றும் அலுவலக துணை பதிவாளர் ராமமூர்த்தி, பூபதிராஜா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.