கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (28), கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் விளையாடத் தொடங்கி சம்பாதித்துள்ளார். ஆனால் சிறிது நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்று பணத்தை அதிகளவில் இழந்துள்ளார்.
மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான இவர், ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்று போனதால் மனமுடைந்து அவரது வீட்டில் இன்று (அக். 31) தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க... ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!
இதனையடுத்து இது குறித்து ஆர்.எஸ். புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் சூதாடி இளைஞர்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகி வருவது வருத்தமளிப்பதாகவும், இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
இதையும் படிங்க... இணைய வழி சூதாட்டம்: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்!