கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதற்காக மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தூய்மைப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கோவையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பலருக்கும் இதுநாள் வரை தேர்தல் நாளன்று பணியாற்றியதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், ”தேர்தல் தினத்தன்று பணியாற்றிய ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படவில்லை, தேர்தல் நாளன்று உணவும் வழங்கப்படவில்லை.
மற்ற அரசு ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்: லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினரின் அதிரடி