ETV Bharat / state

நகை அடகு நிறுவனத்தில் 46.72 லட்சம் ரூபாய் மோசடி - Fraud in Jewelry Mortgage Company

கோவை: நகை அடகு நிறுவனத்தில் 46 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நகை அடகு நிறுவனத்தில் மோசடி
நகை அடகு நிறுவனத்தில் மோசடி
author img

By

Published : Jan 22, 2020, 11:28 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கிவரும் தனியார் நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்து அதன் ஊழியர்கள் நூதன மோசடியில் ஈடுபட்டனர்.

மேலும், பராமரிக்கப்பட்டு வந்த வாடிக்கையாளர்களின் நகைகளில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 150 கிராம் தங்க நகைகளும் காணாமல் போயின.

இதுகுறித்து வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளரான கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பிஜூ (பாலக்காடு) ஆகியோரை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதன் கிளை நிறுவனத்தைச் சேர்ந்த சுபா, விக்னேஷ் ஆகியோரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பழனியில் தனியார் நகைக் கடை உரிமையாளர் கடத்தல் - போலீசார் விசாரணை

Intro:arrestBody:arrestConclusion:கோவையில் நகை அடகு நிறுவனத்தில் 46.72 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர், நகை மதிப்பீட்டாளர் கைது...

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கி வரும் பூரம் பின்சர்வ் நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்து நூதனமோசடி..

பராமரிக்கப்பட்டு வந்த வாடிக்கையாளர்களின் நகைகளில் 30 லட்சம் மதிப்பிலான 1150 கிராம் தங்க நகைகள் மாயம்..

வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில் கிளை மேலாளர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பாலக்காட்டைச் சேர்ந்த பிஜூ ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது....

அதே கிளை நிறுவனத்தைச் சார்ந்த சுபா விக்னேஷ் ஆகிய இருவருக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீச்சு..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.