கோவை தெற்கு மாவட்ட திமுகவினர் பொள்ளாச்சியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றுவரும் மாட்டுச் சந்தையை கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு அரசாங்கமே இலவச முகக்கவசம், கிருமிநாசினி மருந்துகள் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அனைத்து மதுபானக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் கோயம்புத்தூர் பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களிடம் கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.