ETV Bharat / state

பொள்ளாச்சி தொகுதி: 15 மனுக்கள் ஏற்பு - covai and pollachi

கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 38 வேட்புமனுக்களில் 15 மனுக்களும், கோவை தொகுதியில் 41 வேட்புமனுக்களில் 17 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேட்டியளித்தார்.

election
author img

By

Published : Mar 27, 2019, 11:24 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் தொடங்கப்பட்டு, கடைசி நாளான நேற்றுவரை(மார்ச் 26) அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் சரிபார்ப்பு இன்றுகாலை 11 மணி முதல் நடைபெற்றது. இந்தப் பரிசீலனையில் கோவை மக்களவைத் தொகுதியில் பெறப்பட்ட 38 வேட்புமனுக்களில் 15 மனுக்களும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பெறப்பட்ட 41 வேட்புமனுக்களில் 17 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக பொள்ளாச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கூட்டம் கூடியது தொடர்பாக, ஒரு வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், கோவையில் மக்கள் நீதி மையம் கட்சி நிகழ்விற்கு அனுமதி வழங்கிய தனியார் பள்ளிமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை கோவையில் இரண்டு கோடி அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் 50 லட்சம் அளவிற்கு ஆவணங்களை காட்டப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்.

Intro:கோவை மக்களவை தொகுதியில் 38 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 41 வேட்புமனுக்களில் 17 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி பேட்டி.

Body:கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் சரிபார்ப்பு இன்று நடைபெற்றது காலை 11 மணி முதல் நடைபெற்ற பரிசீலனையில் கோவை மக்களவை தொகுதியில் பெறப்பட்ட 38 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பெறப்பட்ட 41 வேட்புமனுக்களில் 17 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார் மேலும் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக பொள்ளாச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கூட்டம் கூடியது தொடர்பாக ஒரு வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் கோவையில் மக்கள் நீதி மையம் கட்சி நிகழ்விற்கு அனுமதி வழங்கிய தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார் மேலும் இதுவரை கோவையில் இரண்டு கோடி அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50 லட்சம் அளவிற்கு ஆவணங்களை காட்டப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.