ETV Bharat / state

வேளாண், மீன்வள பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு தொடங்கியது! - கோவை

தமிழ்நாட்டில் மிக முக்கியமான பல்கலைகழகங்களில் ஒன்றான வேளாண், மீன்வள பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு இன்று தொடங்கியது.

counceiling
author img

By

Published : Jul 12, 2019, 8:07 PM IST

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 3905 இளங்கலை பட்டப்படிப்பு இடங்களுக்கான 2019-2020ஆம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கை ரேங்க் பட்டியல் கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. 41 ஆயிரத்து 950 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

பழைய மகாபலிபுரம் சாலை சிறுசேரி அடுத்து வாணியம்சாவடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி தொடங்கி 15 ,16 என மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

14ஆம் தேதி இளநிலை மீன்வள அறிவியல் படிப்பிற்கும், 15ஆம் தேதி இளநிலை மீன்வள பொறியியல், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வள மாலுமிகளை தொழில்நுட்பவியல் படிப்பிற்கும், 17ஆம் தேதி இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாக படிப்பிற்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தனர்.

Intro:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2019-2020ம் ஆண்டிற்கான சிறப்பு கலந்தாய்வு இன்று துவங்கியது.
Body:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 3905 இளங்கலை பட்டப்படிப்பு இடங்களுக்கான 2019- 2020ம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கை ரேங்க் பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 41950 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவர்களுக்கான இடங்கள் ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்படும். இதன் பின்னர் மாணவர்கள் கல்லூரி தேர்வை மாற்றிக்கொண்டால் ஸ்லைடிங் முறையில் அந்த இடம் அடுத்த ரேங்க் உள்ள மாணவருக்கு ஒதுக்கப்படும் வகையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. வருகிற ஜூலை 23ம் தேதி முழுமையான பட்டியல் வெளியான பின்பு மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களை வழங்கி சரிபார்த்துக்கொள்ளலாம். கலந்தாய்வு துவங்கியதை அடுத்து முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், ராணுவவீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் என 143 இடங்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சர்பார்ப்பு நடைபெற்று தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை டீன் கல்யாணசுந்தரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவர்கள் கலந்தாய்விற்காக பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் எனவும் ஆன்லைன் மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு சான்றிதழ்களை சர்பார்க்க வந்தால் மட்டும் போதும் என தெரிவித்தார். குமளூரில் உள்ள பட்டயக்கல்லூரியில் உள்ள 800 இடங்களுக்கு 3500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் நேற்று இதற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான கலந்தாய்வும் நடைபெறும் எனவும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வில் முகேஷ், சூர்யா, காவ்யா ஆகிய மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.