கரோனா இராண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இந்த ஊரடங்கில் குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் இயங்க தடை அறிவித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஒப்பணக்கார வீதியிலுள்ள பிரபல ஜவுளிக் கடையான சென்னை சில்க்ஸ், பின்புற கதவு வாயிலாக மக்களை உள்ளே அனுமதித்து வந்தனர்.
இதுபோல் இரு தினங்களாக வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள், தடையை மீறி ஜவுளிக்கடையை திறந்து வைத்ததால் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும், இது குறித்து மாநகராட்சி ஆணையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது.