கோயம்புத்தூர், நல்லறம் அறக்கட்டளை உறுப்பினரான யூ.எம்.டி. ராஜா, விழிப்புணர்விற்காக பல மினியேச்சர் பொருட்களை செய்பவர். தற்போது, கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மினியேச்சர் சிலையை செய்துள்ளார். இந்தச் சிலையை பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தை மாதிரியாகக் கொண்டு சோப்பால் செய்திருக்கிறார்.
ஒரேநாளில் இந்த பாகுபலியை உருவாக்கிய ராஜா பேசுகையில், கரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. ஆகையால், ‘பாகுபலியானாலும் ஆகும் பலி’ என்ற கருத்தை முன்வைத்து இந்த சிலையை செய்துள்ளேன். மக்கள் அனைவரும் கிருமி நாசினிகள் அதிகம் கிடைக்கவில்லை என அரசை குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அன்றாடம் பயன்படுத்தும் சோப்புக்கட்டிகளை பயன்படுத்தினாலே கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: பிணையில் வெளிவந்த 136 கைதிகள்