கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை காக்கவேண்டி மாவட்ட பாஜகவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பாஜக தலைவர் நந்தகுமார் பேட்டி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தகுமார், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து கோவையையும் பொதுமக்களையும் காக்க வேண்டி கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மனிடம் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். முதலில் அங்கு யாகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொது இடங்களில் அதிக மக்கள் சேரக்கூடாது என்று அரசு கூறியதன்படி யாகம் ரத்து செய்யப்பட்டு சிறப்பு பூஜை மட்டும் நடத்தப்பட்டது என்றார்.
இதையும் படிங்க: தமிழுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி