கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இருப்பினும் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று (ஆக.19) 394 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 286 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இரண்டு ஆயிரத்து 720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி விண்ணப்ப படிவ சர்ச்சையில் முரணான தகவலைத் தருகிறாரா கோவை மாநகராட்சி ஆணையர்?