கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட், தேனி, நெல்லை, திருவாரூர் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடமாக கோவை அரசு மருத்துவமனையில் இப்பரிசோதனை மையம் நாளை தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவைக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விமானத்தில் பயணிகள் வருவதால் இந்தப் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளவர்களுக்கு உடனடியாக இங்கு பரிசோதனையை செய்ய முடியும் எனவும் மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாலும் பரிசோதனை மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - முட்டை விற்பனை 500 கோடி ரூபாய் வரை இழப்பு