ETV Bharat / state

பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி! - கோயம்புத்தூரில் பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி

கோயம்புத்தூர்: கரோனா தொற்றால் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர் ஒருவர், மனைவி கொண்டுவந்த பிரியாணியை சாப்பிட வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி
பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி
author img

By

Published : Apr 11, 2020, 10:47 AM IST

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அவர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று போத்தனூரை சேர்ந்த கரோனா உறுதி செய்யப்பட்ட 28 வயது நபரின் மனைவி அவருக்காக பிரியாணி செய்துகொண்டார். அதனை அவர் சாப்பிட வேண்டுமென செவிலியிடம் அடம்பிடித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அதற்கு அனுமதி அளிக்க முடியாது மருத்துவமனை நிர்வாகம் தரக்கூடிய சத்தான உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலம் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மருத்துவமனையில் இருப்பிட மருத்துவர் குழந்தைவேல் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியாணிக்கு அடம்பிடித்த நோயாளி

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, உயிருக்கு போராடிவரும் இந்த சூழலில் இளைஞர் பிரியாணி கேட்டு அடம்பிடித்து, ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.