கோவையில் இன்று ஒரே நாளில் 491 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 14,393ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 345 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுநாள் வரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,582ஆக உயர்ந்துள்ளது. ஒன்பது பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் பத்தாயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!