தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 169 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,821 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,029ஆக உயர்ந்தது. அதே சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.