ETV Bharat / state

சிபிஎம் சார்பில் கரோனா உதவி மையம், இலவச வாகனச் சேவை தொடக்கம்

கோவையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்திபுரம் 100அடி சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கரோனா உதவி மையமும், தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், குணமடைந்தவர்களை இல்லத்திற்கு அழைத்து செல்ல இலவச வாகனச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

author img

By

Published : May 24, 2021, 8:41 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கரோனா உதவி மையம், இலவச வாகனச் சேவை துவக்கம்

கோவை: இந்த உதவி மையம் குறித்து சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி. ராமமூர்த்தி தெரிவிக்கும் போது, "கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விபரம், மருத்துவ ஆலோசனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொலைத் தொடர்பு வழி ஆலோசனை, வாகன உதவி, ரத்த தானம் செய்வது குறித்த விபரங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்துறையைச் சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளைத் தேர்வு செய்து இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் உதவியை நாட 94438 84053, 94887 08832, 86800 91826, 99941 58832, 81898 02073 என்கிற இந்த எண்களில் தொடர்பு கொண்டுப் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.

24 மணி நேர இலவச வாகனச் சேவை

இலவச வாகனச் சேவை குறித்து பேசிய கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், இம்மையத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்படும் வகையில் இலவச வாகனச் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டியவர்கள், நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொலை பேசி எண்களை அழைத்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லும் ஏற்பாட்டை செய்துள்ளோம். இந்த சேவை 24 மணி நேர சேவை. கட்சியின் நிர்வாகிகள் அர்ப்பணிப்போடு மக்கள் சேவையாற்ற காத்திருக்கிறார்கள். இந்த வாகனம் முழு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் எந்த வகையிலும் போலியானது அல்ல விளம்பரத்திற்கானது அல்ல என்று தெரிவித்தார்.

மக்கள் சேவையின் முன்னணியில் நிற்க கூடிய கட்சி என்கிற வகையில் இந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பிற உதவிகளுக்கும் இந்த அறிவிக்கப்பட்ட எண்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சேவையை தொடங்கும் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வேலுசாமி, கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி' - மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.