இது குறித்து அந்நிறுவன தலைவர் லோகநாதன் கூறியதாவது, "தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிப்பவரின் வெப்பநிலை, உரிய தகவலை பெறுவதில் குழப்பம் நீடிக்கிறது. இதற்காகவே எங்கள் நிறுவனம் புதிய கருவியை வடிவமைத்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கலாம். அரசு வேலைகளில் இருப்பவர்கள் அவர்களது ஐடி கார்டை காட்டினால் போதும். வெளிநபர்கள், அரசு ஆவணமாக இருக்கும் ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமத்தை ரோபோ முன்பு காட்டி பரிசோதிக்க வேண்டும்.
ஒரு அடி தூரத்திலிருந்து ஆதாரை காட்டினால், அவரது மொத்த விவரமும் இணையத்தில் பதிவாகிவிடும். இதேபோன்று தூரத்தில் இருந்து கை நீட்டினால் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யலாம். இந்த கருவியை தொட வேண்டிய அவசியமில்லை.
இந்தக் கருவியை பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு நிமிடத்தில் 30 பேர் வரை பயன்படுத்த முடியும். மின்சாரம் இல்லாத நேரத்தில் இதில் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மதிப்பு 70 ஆயிரம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!