தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்த திரைப்பட நடனக் கலைஞர்கள் காவல் துறை அனுமதியோடு துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் கரோனா வைரஸ் போன்ற வேடமிட்டும், வன விலங்குகள் வேடமணிந்தும் ஆடிப் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கிராமியக் கலையான கரகாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனிடையே, அங்கிருந்த நரிகுறவர்கள் இன மக்கள் அவர்களின் பாரம்பரிய நடனத்தை கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது, கையுறை அணிவது, கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்போம் என்று காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றனர்.
இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு!