கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகியப் பகுதியில் நேற்று வரை 15 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். குமாரபாளையம் பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அருகில் இருந்தவர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீட்டருகே இருந்த 6 வயது சிறுவனுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருந்தாலும், அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
தற்போது எஸ்.குமாரபாளையத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் முழு அடைப்பு செய்து மருத்துவர்களும் வருவாய்த்துறையின் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் உணவின்றித் தவிக்கும் தினக்கூலிகள்!