ETV Bharat / state

கொள்ளையடித்து விட்டு தப்பி ஓட முயன்றவர்களை விரட்டிப் பிடித்த காவல்துறையினர்!

கோவை: நகைக் கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓட முயன்ற மூவரைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர்.

நகைக் கடை
author img

By

Published : Jul 21, 2019, 7:58 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள வடக்கிபாளையம் பிரிவில் நேற்றிரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியான வகையில் மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்தனர்.

நகைக் கடையில் கொள்ளை

காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் பைக்கை நிறுத்தாமல் சென்றனர். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில், நாகூரை சேர்ந்த இலியாஸ் என்பவர் நகைக்கடையில் சுமார் 30கிராம் தங்கம் மற்றும் ஒருகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியோட முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களிடமிருந்து நகைகளை மீட்ட காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தப்பியோடிய கொள்ளையர்களைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்து நகைகளை மீட்ட சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Intro:Jewellery theftBody:Jellewelry theftConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் நகை கடையில்திருடியா இருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரனை . பொள்ளாச்சி-21 பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் நேற்று இரவு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக ஒரு பைக்கில் வந்தவர்களை வழிமறித்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தாமல் விரைந்து சென்றனர்.

 அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபர்களை  தூரத்திற்குள் பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டுவந்தனர். விசாரணையில், அவர்கள் மூன்றுபேரும் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில், நாகூரை சேர்ந்த இலியாஸ் என்வர் நகைக்கடையில்,

 கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்வதுடன், நகை கொள்ளையில் ஈடுபட்ட, மற்றொரு நபரை வடக்கிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர். 

 இதையடுத்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடையின் ஒரு பகுதியில் இருந்த சுமார் 30கிராம் தங்கம் மற்றும் ஒருகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையின் முன்பு இருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இவர்களுக்கு வேறு ஏதும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.