ETV Bharat / state

கோவை அருகே வைக்கப்பட்ட சர்ச்சையான பேனர் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காடுவெட்டி பாளையம் என்ற கிராமத்தில் மதப்பிரச்சாரம் செய்ய யாரும் வரக்கூடாது, இது இந்துக்கள் வாழும் இடம் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பேனர்
பேனர்
author img

By

Published : Aug 17, 2022, 4:16 PM IST

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை இங்குள்ள வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பேசு பொருளாகி வருகிறது.

மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது. மேலும் இந்த பேனர் காவி நிறத்தில் எச்சரிக்கை என்ற பெரிய எழுத்துக்களுடன், இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும் மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து காடுவெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, அண்மையில் சிலர் காடுவெட்டி பாளையம் பகுதியில் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்த பேனரை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.