கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்தவர் வசந்த். இவர் கஞ்சா வியாபாரம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பாரதிபுரம் அரிஜனா காலனிக்கு தனது நண்பர்கள் இருவருடன் வசந்த் சென்றுள்ளார். அங்கு கஞ்சா வியாபாரி சரவணன் என்பவரை வசந்த் கத்தியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சரவணன், அவரது நண்பர் ஹரி ஆகிய இருவரும் திருப்பித் தாக்கியுள்ளனர். அப்போது அருகே கிடந்த ஓடுகளைக் கொண்டு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த வசந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட நால்வரும் செய்வதறியாது தப்பியோடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : வீரர்களை குறிவைக்கும் கரோனா....ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!