கோவை: வால்பாறை அருகே உள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புலி ஒன்று நடமாடி வந்தது. இந்நிலையில் அந்த புலியை வலைவீசி பிடித்த வனத்துறையினர், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள மனித, வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் உதவி மையத்திற்கு கொண்டு வந்தனர்.
அதன் பின்பு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக, புலி பூரண குணமடைந்தது. இதனையடுத்து தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிற்கிணங்க, இன்று (அக்.13) மானாம்பள்ளி வனச்சரகப் பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டது.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், புலிக்குத் தேவையான உணவினை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் வீலிங் செய்த இளைஞர்கள்