மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் பல்கலைக்கழகம், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்