ETV Bharat / state

'பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண்ணின் பெயர் வெளியானதற்கு ஆளுங்கட்சியே காரணம்!' - பிருந்தா காரத் - POLLACHI ISSUE

பொள்ளாச்சி: ஆளும் கட்சியினரின் தலையீட்டால்தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர் என்று பிருந்தா காரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிருந்தா காரத்
author img

By

Published : Apr 6, 2019, 11:04 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற, கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கேற்ப, இந்த தேர்தல் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு தக்க பாடம் புகட்ட முடியும்.

தமிழகத்தில் இருக்கும் பெரியதம்பி மற்றும் சின்னதம்பி ஆகியோரை தோற்கடிப்போம். மோடி அரசாங்கம் முஸ்லீம்களுக்கும், தலித்களுக்கும் மத்தியில் கடும் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது. மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள்தான் மேலும் பணக்காரர்களாக ஆகிறார்கள். ஏழை அப்படியே ஏழையாகவே தான் இருக்கிறார்கள்.

மோடி என்ன தாக்குதல் நடத்தினாலும் சரி, வாயில் பசையை போட்டு கொண்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அமைதியாக இருக்கிறார்கள். 2014ல் மோடியா... அல்லது இந்த லேடியா என்று கர்ஜித்த ஜெயலலிதா எங்கே..? மோடிதான் டாடி என்று சொல்லும் ஒபிஎஸ் ஈபிஎஸ் எங்கே..?

பிருந்தா காரத் பரப்புரை

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் மிகுந்த வேதனையைத் தருகிறது. மோடி ஆட்சியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார். இதில் 80% குற்றவாளிகள், பாஜக மற்றும் அதிமுக ஆட்சியால் எளிதில் விடுதலை ஆகிறார்கள். ஆளும் கட்சியினரின் தலையீட்டால்தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறையினர் வெளியிட்டனர். ஆளும் கட்சியினர் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஜம்முவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்காததற்கு முக்கிய காரணம், மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிதான்” என உரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூ அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரிந்த காரத் தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பிரச்சாரம். பொள்ளாச்சி - 6

மதிப்பிற்குரிய தலைவர்களே மற்றும் தி.மு.க.,வை சார்னத்தாவர்களே..

நான் இங்கு வந்ததற்கு காரணம் தி.மு.க., சார்பில் போட்டியிடும் சண்முகசுந்தரத்திற்காக வாக்கு சேர்ப்பதற்காக வந்துள்ளேன்.

நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் 40 பாராளுமன்றத்திலும், 18 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

நண்பர்களே   நாடாளுமன்ற தேர்தலில் பொன்னான வாய்ப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்கை என்பது போல வருகின்ற பாராளுமன்ற , சட்டமன்ற தேர்தலில்லும் மத்தியில் இருக்கும் பெரியதம்பி,மற்றும் சின்னதம்பி ஆகியோரை தோற்கடிப்போம்.

நான் வருந்துகிறேன் கோவாம் கொள்கிறேன் , பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து வேதனை அடைகிறேன்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

80%குற்றவாளிகள் இந்த ப.ஜ.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் கீழ் விடுதலை ஆகிறார்கள்.   குற்றவாளிகளுக்கு ஆதறாவக ஆளும் கட்சியினர் இருப்பதால் மட்டுமே இவார்களை  போன்றவர்கள் விடுதலை ஆகிறார்கள்.

ஜம்முவுவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்காத காரணம் மதியில் ஆளும் ப.ஜ.க.,, ஆட்சி தான்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறையினர் வெளியிடுவதன் காரணம் ஆளும் கட்சியினர் தலையீட்டால் தான்.

பொள்ளாச்சி ஜெயராமன் என்ற பெயர் எதற்கு உங்களுடன் பெயறில் ஒட்டியிருக்கும் பொள்ளாச்சி என்ற பெயரை தூக்கி எறியுங்கள்.

2014ல் மோதியா லேடிய என்று கர்ஜித்த  ஜெயலலிதா எங்கே மோடி தான் டாடி என்று சொல்லும் ஒபிஎஸ் ஈபிஎஸ் எங்கே.

இந்தியாவின் பன்முக தன்மை பற்றி பெருமையடைகிறோம்.

மோடி அரசாங்கம் முஸ்லீம்கலுக்கும், தலித்துகளுக்கும் மத்தியில் கடும் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது.

மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் தான் மேலும் பனகறார்கள்  ஆகிறார்கள் ஏழை எழையாகவே இருக்கிறார்கள்.

பண மதிப்பீட்டு  நடவடிக்கைகளால் வேலை இல்லைதா சூழ்நிலை தான் ஏற்பட்டது.

மோடி என்ன தாக்குதல் நடத்தினாலும் சரி வாயில் பசையை போட்டு கொண்டு ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ்., ஆகியோர் அமைதியாக இருக்கிறார்கள் மக்களே.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.