ETV Bharat / state

கோவையில் புழங்கும் மெத்தாபெட்டமைன் - கல்லூரி மாணவர்கள் உஷார்!

மெத்தம்பேட்டமைன் எனும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூவரை கைதுசெய்த கோவை போலீசார் இந்த போதைப் பொருள் புழக்கத்திற்கு காரணமான கும்பலை தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 19, 2023, 1:05 PM IST

கோவை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர் ரக வெளிநாட்டு போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் சந்தேகத்துக்கிடமான அந்த பொட்டலம் குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் இருந்திள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக அந்த இளைஞர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இளைஞர்கள் இருவரும் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்த கிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த முகமது அஷ்ரத் என்பவருடன் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்து மெத்தம்பேட்டமைன் எனும் உயர்ரக போதைப் பொருளை கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதன் பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவ இந்தியா அருகே பதுங்கி இருந்த முகமது அஷ்ரத்தையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 60 கிராம் மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பேட்டமைனின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். சமிபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் பிடிபட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கோவையில் அதே மெத்தம்பேட்டமைன் போதை பொருளை வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: Viral:“நீ எல்லாம் ஒரு போலீசா?”... போலீஸுடன் மல்லுக்கட்டிய மது பிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.