ETV Bharat / state

முகநூல் பழக்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை - கல்லுாரி மாணவர் தற்கொலை

பொள்ளாச்சி: முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பெண் ஒருவரும், பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் கல்லூரி மாணவர் ஒருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

student suicide
student suicide
author img

By

Published : Nov 19, 2020, 11:26 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் நந்தகுமார் (வயது 22), இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

நந்தகுமாருக்கும் அவருடன் படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நந்தகுமார் தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் தனக்கும் மாணவிக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அதற்கு அவரது பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறினர்.

இதனால் கடந்த சில நாள்களாக நந்தகுமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்றிரவு வீட்டிலிருந்த அவர், வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, தற்கொலை செய்துகொண்ட நந்தகுமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் 174 சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோமங்கல காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையடுத்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள தொழிற்போட்டைை பகுதில் புவனேஸ்வரி (30). இவர் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

தனது குழந்தையுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் காஜாமைதீன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக குடும்பம் நடத்திவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர்.

பின் புவனேஸ்வரி காஜாமைதீனை தொடர்புகொண்ட பொழுது கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

புவனேஸ்வரி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர் மற்றும் இளம்பெண் தற்கொலை சம்பவங்கள் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.