ETV Bharat / state

கஞ்சா விற்ற இளைஞர் கைது -  ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்!

author img

By

Published : Jun 24, 2020, 7:59 PM IST

கோவை: சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

College student arrested for selling cannabis

கோவை மாவட்டம் சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணம்பட்டியில் காவல்துறையினர் மாறு வேடத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து சோதனை செய்த காவலர்கள், அவரிடம் ஒரு கிலோ அளவிலான கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த லிலியன்ஜெப் என்பதும், கோவை சித்ரா பூங்கா நகரில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவைவும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.