ETV Bharat / state

கோவையில் மாபெரும் கல்வி கடன் முகாம்கள்.. எங்கெல்லாம் நடக்கும் நடக்கிறது என முழுவிபரம் - எங்கெல்லாம் நடக்கும் நடக்கிறது என முழுவிபரம்

Mega educational loan camp in Coimbatore: செப்டம்பர் இறுதியில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளதாகவும், இதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை பெற இ-சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும் இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை
கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:01 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (செப்.2) வெளியிட்ட செய்தி அறிக்கையில், "கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு 'மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள்' கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த மாதம் 15ஆம் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், 18ஆம் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற்றன. இதற்கான, ஆவணங்கள் முறையாக சரிப்பார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இம்முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேரவுள்ளதால், பொறியியல் கல்விபயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்று மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், வருகின்ற செப்.22 அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, செப்.26 அன்று பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, செப்.29 அன்று ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில், கலை மற்றும் அறிவியல் துறை மாணவ மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன" என அறிவித்து இருந்தார்.

மேலும், "இம்முகாமில் மாணவர்களுக்கு கல்விகடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிடச் சான்றுகள் மற்றும் பான் கார்டு ஆகிய சேவைகளை பெற செப்.4 முதல் செப்.20 வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு (Core Committee) மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் (அறை எண்:16) தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்வி கடன் வழங்கும் பணியினை மேற்பார்வை செய்யப்பட்டுவருகிறது. எனவே, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவரும் எதிர்வரும் செப்.04 முதல் செப்.20 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: வால்பாறையில் வலம் வரும் காட்டு யானைகள் கூட்டம்... வீடியோ வைரல்! பொது மக்கள் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.