ETV Bharat / state

'மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே' - முதலமைச்சருக்கு மாணவர்கள் நன்றி - arrear students praise Tamilnadu Cm

கோயம்புத்தூர்: ஆர். எஸ் புரம் பகுதியில் அரியர் வைத்த மாணவர்கள் முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "மாணவர்களின் மனிதக் கடவுளே" என்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

coimbattore-arrear-students-praise-edappadi-palaniswami-in-poster

author img

By

Published : Aug 29, 2020, 3:19 PM IST

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, ஆர்.எஸ் புரம் பகுதியில் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் "மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே" என்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக வெகு நாள்களாக கல்லூரி தேர்வுகள் தள்ளிப்போயின. இதையடுத்து, அரியர் தேர்வுக்காக பணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

இதைத்தொடந்து அவருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஆகஸ்ட் 29) கோவையிலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

"மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே" என்று எழுதப்பட்டிருந்த அந்த சுவரொட்டியில் திருவள்ளுவர் உருவத்தை ஓரத்தில் வைத்தும் முதலமைச்சர் உருவத்தை நடுவில் வைத்தும் எடிட் செய்திருந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க...'அரியர் மாணவர்களின் அரசனே' - முதலமைச்சருக்கு கட்அவுட் வைத்த அரியரியன்ஸ்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.