ETV Bharat / state

பேஸ்புக் மூலம் மும்பை பெண்ணை  கோவை வரவழைத்து பாலியல் வன்புணர்வு - Facebook sex chats

பேஸ்புக் மூலம் பழகி மும்பை பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கோவையை சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலம் மும்பை பெண்ணை ஏமாற்றிய கோவை இளைஞர்!

author img

By

Published : Jan 11, 2023, 9:57 AM IST

கோயம்புத்தூர்: ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (24). இவருக்கும் மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோகு இருவரும் காதலித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக பழகிய அப்பெண்ணிடம், நேரில் பார்க்க ஆசைப்படுவதாக செந்தில்குமார் கூறியுள்ளார். இதனால் செந்தில்குமாரின் பிறந்தநாளை ஒட்டி, அப்பெண் கோவைக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் செந்தில்குமார் அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண், ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் செந்தில்குமார் மீது 420 மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் மனைவியும், குழந்தையும் 21 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலருக்கு ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.